Pages

Subscribe:

Tuesday, February 5, 2013

இஸ்லாம் ஓர் அறிமுகம்

தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது, எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?
 
பூமி, செடிகொடிகள், பூச்சி இனங்கள், மிருகங்கள், பறவைகள், மீன் வகைகள், ஆகியவற்றோடு ஏனைய படைப்புக்களும் எப்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? என்பது பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?
 
அவற்றின் வாழ்வுக்கான வழிகாட்டலும், முறையான நிர்வாகக் கட்டமைப்பும் பற்றியெல்லாம் தெளிவு பெற்றிருக்கிறீர்களா?
 
சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், மேகங்கள், வீசும் காற்று ஆகியவற்றோடு ஏனைய சிருஷ்டிப்புகளும் எவ்வாறு உலக வாழ்வுக்கான பங்களிப்பை உரிய முறையில் அளிக்கின்றன என்பதை அறிவீர்களா?
 
தக்க முறையில் அமைந்துள்ள உங்கள் உடல் அமைப்பைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அவற்றின் உறுப்புக்கள் எப்படி இணைந்து செயற் படுகின்றன?.
 
இத்தகைய சிந்தனைக்கு எட்டாத படைப்புக்களை சிருஷ்டித்தது யார்? அவற்றின் திட்டமான ஒருங்கிணைப்பை நிர்மாணித்தது யார்? சிக்கல்கள் நிறைந்த இப்பிரமாண்டமான அமைப்பை முழுமையாக நிர்வகிப்பது யார்?
 
இந்தப் படைப்புக்களின் சிருஷ்டிப்பு விவகாரத்தில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஏன் முடி போன்ற ஓர் சிறிய படைப்பைக் கூட வேறு எவராலும் உருவாக்க முடியாது!
 
படைத்தவனும், ஆளுபவனும் ஒரே இறைவனே, அவனே உண்மை இறைவனாவான். ஒரு இறைவனுக்கும் அதிகமாகப் பல இறைவன்கள் இருந்தால் வானங்களிலும், பூமியிலும் குழப்பங்கள் ஏற்பட்டு விடும். எனவே, ஒருவனான அல்லாஹ்வே உண்மையான இறைவனாவான்.
 
எனவே இத்தகைய அடிப்படைகளின் படி எம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுக்கு மகிமை கூறவும், எம்மை அர்ப்பணிக்கவும், சிறப்பும் அருளும் மிக்க அவனது வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
 
எமது புத்தி நுட்ப விளக்கத்துக்காக சிருஷ்டிப்பாளன் அருள் புரிந்து, நேர்வழியைத் தெரிவு செய்ய சுதந்திரமும் தந்துள்ளான்.
 
தனது தூதர்கள் மூலமும், வேதங்கள் மூலமும் அல்லாஹ் எமக்கு நேர்வழி காட்டியுள்ளான். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்குப் பின் தூதுத்துவத்தை நிறைவு செய்ததோடு, அல்குர்ஆனோடு வேதங்களும் முற்றுப் பெற்றது.
 
வாழ்வில் தனித்தனியே இரு வழிகள் உள்ளன. ஒன்று இவ்வாழ்விலும், மறு உலக வாழ்விலும் இனிமைப் பயக்கும், இதுவே ஒரே இறைவனுக்கு கட்டுப் படுதலா (இஸ்லாமா) கும். மற்றது இவ்வுலகிலும் துன்பம் விளைவிப்பதோடு மறுமையிலும் தண்டனையைப் பெற்றுத்தரும்.
 
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:256)
 
தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது; எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?
 
அல்லாஹ் எங்களை நேர்வழியில் நடத்துவானாக! ஆமீன்.
 
Courtesy: Islamkalvi

0 comments: